Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் மண்டு நெடுஞ்சாலையில் பல்லாங்குழி சாலையால் விபத்து ஏற்படும் அபாயம்- மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் மண்டு நெடுஞ்சாலையில் ஆங்காங்கே சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் வாழைத்தோட்டம், பெல்ரம்பட்டி, சீங்காடு, அமானிமல்லாபுரம், மாரண்டஹள்ளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இவ்வழியாக பேருந்துகள் மற்றும் கனரக வானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. 


இச்சாலையில் முனியப்பன் கோவில், மண்டு, வாழைத்தோட்டம் நெடுஞ்சாலை வரை சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு அடிக்கடி இருசக்கர வாகனம் விபத்து ஏற்பட்டு வருகிறது மேலும் இரவு நேரங்களில் சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 


எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு நெடுஞ்சாலை பகுதியில் உள்ள குழிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies