தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு தலைவர் பி. ஆர். பாண்டியன் அவர்களின் நல்ஆசியுடன், இன்று தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் தமிழக விவசாயிகள் விழிப்புணர்வு சங்கம் துவங்கப்பட்டது.
கிருஷ்ணாபுரத்திலுள்ள சுபஸ்ரீ கல்யாண மகாலில் சங்க துவக்க விழா நடைபெற்றது. சங்கத்தினை இச்சங்கத்தின் மாநில பொறுப்பாளர் கே. சின்னசாமி மற்றும் நிர்வாகிகள் துவக்கி வைத்தனர். விழாவில் பேசிய சின்னசாமி விவசாயிகள் வருங்காலங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென்றும், மற்றும் அரசின் விவசாயிகளுக்கான பல நலத்திட்டங்களையும் தெரிந்து பயனடையவேண்டும், அதன் நோக்கத்தி்ல் தமிழக விவசாயிகள் விழிப்புணர்வு சங்கம் என்ற பெயரில் புதிதாக துவங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக வேளாண்மைத்துறை துணை இயக்குநர் இளங்கோவன் மற்றும் சுப்பிரமணி, நாகமணி, சங்கத்தின் ஆலோசகர், வழக்கறிஞர் திரு. ராஜாங்கம் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி கந்தன் நன்றியுரை வழங்கினார்