தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் பல்வேறு துறைகளின் சார்பில் 225 பயனாளிகளுக்கு ரூ.60.48 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் முன்னிலையில் இன்று (30.08.2023) வழங்கினார்கள்.
மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் வருவாய்த்துறையின் சார்பில் 125 பயனாளிகளுக்கு ரூ.58.50 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணிக்கான நியமன ஆணையினையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் 4 பயனாளிகளுக்கு ரூ.60,000/- மதிப்பீட்டில் கறவை மாடுகள் பெறுவதற்கான ஆணையினையும், ஒருவருக்கு ரூ.135/- மதிப்பில் 5 கிலோ ராகியினையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அதிக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துகொள்வதற்கு ரூ.1000/- உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25,000/- உதவித்தொகைகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.32,760/- மதிப்பீட்டில் விலையில்லா சலவைப்பெட்டிகளையும், 5 பயனாளிகளுக்கு ரூ.30,000/- மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களையும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2018,2019,2020 ஆம் ஆண்டுகளில் மாவட்டத்தில் அதிகமாக கொடிநாள் நிதி வசூல் செய்த 3 பயனாளிகளுக்கு தலா 30 கிராம் வெள்ளிப்பதக்கங்களையும், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் 60 பத்திரிக்கையாளர்களுக்கு பத்திரிக்கை நலவாரிய உறுப்பினர் அட்டைகள் என மொத்தம் 225 பயனாளிகளுக்கு ரூ.60.48 இலட்சம் (ரூ.60,47,895/-) மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, மாவட்ட ஆட்சியிரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமதி.நசீர் இக்பால், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.லோகநாதன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், பத்திரிக்கையளார்கள், பயனாளிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.