தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலம் வழங்கப்படும் சுற்றுலா தொழில்முனைவோர்களுக்கான விருதுகள் பெற வருகின்ற 27.08.2023 -க்குள் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தினக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தொழில்முனைவோர்களுக்கு விருதுகள் வழங்க உத்தேசித்துள்ளது.
தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில்
- சிறந்த உள்வரும் சுற்றுலா ஆபரேட்டர்,
- சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஆபரேட்டர்,
- சிறந்த பயண கூட்டாளர்,
- சிறந்த விமான கூட்டாளர்,
- சிறந்த தங்குமிடம்,
- சிறந்த உணவகம்,
- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நட்சத்திர நிகழ்ச்சியாளர்,
- சிறந்த முக்கிய சுற்றுலா ஆபரேட்டர்,
- சிறந்த சாகச சுற்றுலா மற்றும் முகாம் தளம் ஆபரேட்டர்,
- சிறந்த கூட்டங்கள் ஊக்குவிப்பு மாநாடு மற்றும் கண்காட்சி (MICE) அமைப்பாளர்,
- சிறந்த சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்,
- சிறந்த சுற்றுலா வழிகாட்டி,
- தமிழ்நாடு பற்றிய சிறந்த விளம்பரம்,
- சிறந்த சுற்றுலா ஊக்குவிப்பு விளம்பரப்பொருள்,
- சுற்றுலா மற்றும் விருந்தோம்பலுக்கு சிறந்த கல்வி நிறுவனம் போன்ற விருதுகள் வழங்கப்பட உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில்முனைவோர்கள் www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக 27.08.2023 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.