இஸ்லாமியர்களையும், கிருத்துவர்களையும் கொச்சைப்படுத்தி, தமிழகத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாவட்ட அமைப்பாளர் பாஷா தலைமையில் அரூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் செல்லைசக்தி, மாநில துணைச்செயலாளர் காதர்பாஷா, மொரப்பூர் ஒன்றிய செயலாளர் திருலோகன், தொகுதி துணைச்செயலாளர் பெ.கேசவன், ஒன்றிய துணைச்செயலாளர் தீரன்தீர்த்தகிரி, நகர செயலாளர் சித்தார்த்தன், மாவட்ட துணை அமைப்பாளர் துரைவளவன், வேம்பை கண்ணதாசன், மொரப்பூர் ஒன்றியதுணை செயலாளர் ஜெய்பீம். குமார்வளவன், சாக்ரட்டிஸ் வீரமணி, ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர்.