நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி வில்வித்தை போட்டி தமிழ் நாடு அரசு சுற்றுலா துறை சார்பில் கடந்த ஆகஸ்ட் 2 மற்றும் 3 தேதியில் நடைபெற்றது. இதில் தர்மபுரி அமலா ஆங்கிலப் பள்ளி மாணவர் வெ.பிரதீஷ்வெங்கட் - 8 வயதிற்குட்பட்ட பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
இவருக்கு தர்மபுரி டிராகன் வில்வித்தை பயிற்சி மையத்தில் திரு.சிவாகுமார் அவர்கள் பயிற்சி அளித்து வருகிறார் என்று குறிப்பிடத்தக்கது.