காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தினை நிறைவேற்ற வலியுறுத்தி நமது காவிரி! நமது உரிமை என்பதினை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நடைப்பயணம் ஒகேனக்கலில் துவங்கியது.
காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேகாதாட்டு அணை கட்டும் முயற்சியை தடுத்த நிறுத்த வேண்டும். நீர்நிலைகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி CPIM சார்பில் தருமபுரி மாவட்ட செயலாளர் ஏ.குமார் தலைமையில் நடைபயணம் துவங்கியது இப்பயணம் ஆகஸ்ட் 18ல் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு நடைபயணம் நிறைவடையும். இந்நிகழ்வினை கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்.சின்னதுரை நடைபயணத்தை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் CPI- M கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.