பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபயணம் வரவேற்பு பொதுக்கூட்டம் இன்று இரவு நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டில் அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்தவேண்டும், தருமபுரி மாவட்ட நீர்நிலைகளை மேம்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஒகேனக்கல் குடிநீர் திட்டம் இரண்டாம் கட்டபணிகளை துவக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆக-16 ம் தேதியான இன்று பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கல்லில் நடைபயணம் துவங்கியது, 18 ம் தேதி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு நிறைவடைகிறது.
இன்று மாலை பெண்ணாகரத்தில் நடைபெற்ற நடைப்பயணத்தில் அரண்மனை பள்ளம் பகுதியில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர், தொடர்ந்து மடம் கிராமத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் எம் ஆறுமுகம் நினைவிடத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது, ராம்நாத் திரையரங்கம் முன்பு தேமுதிக முன்னாள் நகர செயலாளரும் பென்னாகரம் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான பி கே குமார் தலைமையில் அக்கட்சியினர் வரவேற்பு அளித்தனர், தொடர்ந்து காவேரி ரோடு, காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், கடைவீதி வழியாக நடைபயணம் நடைபெற்று இரவு பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைப்பயணம் வரவேற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நடைபயணம் வரவேற்பு பொதுக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ குமார் தலைமை வகித்தார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, வே.விஸ்வநாதன், எம்.முத்து, ஆர். சின்னசாமி, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆ.ஜீவானந்தம், சி.ராஜி உள்ளிட்டோர் பேசினார்கள்.
இறுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரும் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமான சின்னதுரை நிறைவுரையாற்றினார், இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
இன்று முதல் நாள் நடைபயணம் நிறைவுற்ற நிலையில் நாளை காலை பென்னாகரத்தில் இருந்து இரண்டாவது நாள் நடை பயணம் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.