அதனை தொடர்ந்து, தருமபுரி ஊராட்சி ஒன்றியம், சோகத்தூர் ஊராட்சி சத்யாநகர் பகுதியில் ரூ.2.00 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து, அடிக்கல்நாட்டி பணியை தொடங்கி வைத்தார். பின்னர், இலக்கியம்பட்டி ஊராட்சி, குள்ளனூர் மயானத்திற்கு பொதுமக்கள் கோரும் வழித்தட பாதையும், குள்ளனூர் ஏரிக்கரை பகுதி அருகே உள்ள குடியிருப்பு பொதுமக்கள் குடிநீர் பொதுகிணற்றை தூர்வாரி,சுற்றுச்சுவர் அமைக்க கோரியதையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சிகளில், இலக்கியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுதாரமேஷ், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர் பச்சமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தங்கராஜ், ரவி, முன்னாள் ஒன்றிய செயலாளர் சக்திவேல், மாவட்ட இளைஞர் சங்க துணை தலைவர் சந்தோஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேடியப்பன், ஒன்றிய அமைப்பு செயலாளர் தங்கதுரை, இலக்கியம்பட்டி வார்டு உறுப்பினர் கங்காதரன், நிர்வாகிகள் மாது, முருகன், சத்தியமூர்த்தி, சசிக்குமார், இளையராஜா, சுப்ரமணி, சிவபிரகாசம், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.