இரத்ததானம் கொடை என்பது நமக்கு ஒரு சில நிமிடங்கள் தான் ஆனால் அது இன்னொருவருக்கான வாழ்நாள். மை தருமபுரி அமைப்பின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் பல மனிதநேயமிக்க சேவைகளை செய்து வருகின்றனர். இந்த அமைப்பின் மூலம் இரத்ததானம் சேவை மிகச்சிறப்பாக செய்து வருகின்றனர்.
இதுவரை மை தருமபுரி அமைப்பின் மூலம் 2013 ஆம் ஆண்டு முதல் இதுவரை 7350 யூனிட் ரத்தம் கொடையாக வழங்கி உள்ளோம். மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் மதிப்புறு முனைவர் சதீஸ் குமார் ராஜா அவர்கள் பிறருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இதுவரை 46 முறை இரத்ததானமும் 29 முறை தட்டணுக்கள் தானமும் வழங்கி மொத்தம் 75 முறை இரத்ததானம் கொடை வழங்கி உள்ளார். நாட்டின் சுதந்திர தின விழாவிற்காக இந்த இரத்ததானத்தை சமர்ப்பிக்கிறார்.