நிகழ்ச்சிக்கு கூட்டுறவு துறைத்தலைவர் இராஜேந்திரன், தாவரவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் பிரபாகரன் வரலாற்று துறை உதவி பேராசிரியர் சாரதி, ஸ்பீடு தொண்டு நிறுவன இயக்குநர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர் சரவணன், உடற்கல்வி இயக்குனர் முனைவர் பாலமுருகன், சேலம் மாவட்ட உழவர் உற்பத்தி கூட்டுறவு தலைவர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு இளையோர் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளைஞர் அலுவலர் பிரேம் பரத்குமார் வரவேற்றுப் பேசினார். பாரதப் பிரதமரின் நான் ஏற்கும் ஐந்து உறுதிமொழிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் எடுத்துக் கொண்டனர். மேலும் ஓம் சக்தி கிராமிய கலைக்குழு வினரின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 300க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.