Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே உள்ள பூங்குட்டை ஏரி முதல் தாமரை ஏரி வரை உள்ள கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி ஆய்வு.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்க்குட்பட்ட எர்ரணஅள்ளி ஊராட்சியில் மழை காலங்களில்  ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீரானது  போக்குவரத்து பணிமனை மற்றும் நெடுஞ்சாலை பகுதியில் குளம் போல் தேங்குவதால் போக்குவரத்து பணிமனை மற்றும் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும், வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு பெரும்சிரமம் ஏற்பட்டு வருகிறது, தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்க்கு பொது மக்கள் புகார் அளித்து வந்தனர்.


இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி  நேரில் ஆய்வு மேற்கொண்டதில் புங்கன்குட்டை, மன்னார்குட்டை ஆகிய ஏரிகளில் இருந்து  மழைக்காலங்களில் வெளியேறும் உபரி நீரானது தளவாய்அள்ளி புதுர், கக்கன்ஜிபுரம், ரெட்டியூர், மூங்கப்பட்டிரெயில்வே தரைப்பாலம் வழியாக போக்குவரத்து பணிமனை மற்றும்  நெடுஞ்சாலைகளில் குளம் போல்  தேங்கி பல்வேறு பாதிப்புக்களை  ஏற்படுத்தி வருகிறது,

 

இதற்கு புங்கன் குட்டை முதல் தாமரை ஏரி வரை உள்ள ஏரிக்கால்வாய் ஆக்கிமிப்புக்களை அகற்றி தாமரை ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வதே நிரந்தர தீர்வாகும் இதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.


இந்த ஆய்வில் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, செயல் அலுவலர்டார்த்தி, தாசில்தார் ராஜா, நெடுஞ்சாலை துறை ஆய்வாளர் சுப்ரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies