பென்னாகரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், பள்ளி முடிந்து, இன்று மாலை, மாணவ மாணவிகளை, அவர்களின் வீடுகளுக்கு பள்ளி வேனில் அழைத்துச் சென்றனர். அப்போது பேருந்து எதிரே தாறுமாறாக வந்த, இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க, சாலை வளைவில் கட்டுப்பாட்டை இழந்து அந்த வேன் தலைகீழாக கவர்ந்தது.
இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பேருந்தில் சிக்கித் தவித்த குழந்தைகளை மீட்டு கிடைத்த வாகனங்கள் மூலம் பெண்ணாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர், இதில் 5 குழந்தைகளுக்கு அதிகப்படியான காயம் ஏற்பட்டுள்ளது.
15 முதல் 20 குழந்தைகள் லேசான காயங்கள் அடைந்துள்ளனர் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, பள்ளி பேருந்து கவிழ்ந்ததால் பெற்றோர்கள் அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.