பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும் மற்றும் பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜி .கே .மணி அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்பொழுது அவரது உடல்நிலை பூரண குணமடைய வேண்டி தருமபுரி கோட்டை கோயிலில் உள்ள சிவன் மற்றும் கல்யாண காமாட்சி சிறப்பு அர்ச்சனை மற்றும் பூஜைகள் பிரதோஷ வழிபாடு செய்யப்பட்டது. இதனை அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர் ரா கார்த்திகேயன் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தார்.
மேலும் அளேபுரம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோவிலில் அர்ச்சனை செய்து வழிப்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியினை சார்ந்த அருண் உடன் இருந்தார்.