தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், மிட்டாதின்னஅள்ளி ஊராட்சி, எட்டியானூர் கிராமத்தில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் ரூபாய் 2 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அப்பணிக்கு பூமி பூஜை செய்து, பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் ரெ.மு.மனோகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாது, ஒன்றிய செயலாளர் ஆ.அன்புகார்த்திக், ஒன்றிய தலைவர் வடிவேல், ஒன்றிய இளைஞர் சங்க தலைவர் கார்த்திகேயன், பசுமைத் தாயக மாவட்ட துணை தலைவர் சரவணன், நிர்வாகிகள் தனபால், கிருஷ்ணன் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர் .