இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது:- கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் செவ்வாய்கிழமை அன்று மாவட்ட ஆட்சியராகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு கீழ் காணும் கிட்டடணிகளை மேற்கொள்ள சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படும்.
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்து பல வருடங்கள் கடந்தும் வைப்புத்தொகை இரசீதுகள் கிடைக்கபெறாமல் உள்ள பயனாளிகள் 18 வயது பூர்த்தியடைந்தும் முதிர்வுதொகை கிடைக்கபெறாமல் உள்ள பயனாளிகள் ஆகியோர்கீழ்கண்ட உரிய சான்றுகளோடு ஆஜராகி இச்சிறப்பு குறைதீர் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவைப்படும் சான்றுகள்;
இத்திட்டத்தில் பதிவுசெய்து நாளது தேதி வரை வைப்புத்தொகை தொகை இதூசீதுகள் கிடைக்கப்பெறாத பயனாளிகள் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்த ஒப்புகை இரசீதுடன் கூடிய இணையவழி விண்ணப்பத்துடன் இச்சிறப்பு முகாமில் கலந்து கொள்ளவும்.
இத்திட்டத்தில் பதிவு செய்து வைப்புத்தொகை ரசீது பெற்று 48 வயது பூர்த்தியடைந்து முதிர்வு தொகை கிடைக்க பெறாத பயனாளிகள் வைப்புத்தொகை இரசீது நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பிறப்பு சான்றிதழ், பயனாளியின் நடப்பில் உள்ள வங்கிக்கணக்கு முகப்பு புத்தக நகல், பயனாளியின்(தாய் மற்றும் மகள்) வண்ணப்புகைப்படம்-2 ஆகிய சான்றுகளோடு இச்சிறப்பு முகாமில் கலந்து கொள்ளவும்.
மேலும் திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம், கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியரகம், தருமபுரி-636705, (தொலைப்பேசி எண்: 04342-233088) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப. அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.