தருமபுரி மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து செல்வ மகள் சேமிப்பு திட்டம் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 1௦6 பெண் குழந்தைகளுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு துவக்கப்பட்டு, ஒவ்வொரு மாணவிக்கும் தலா ரூ.500 விதம் சேமிப்பு கணக்கில் செலுத்தி சம்மந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (04.08.2023) மாவட்ட ஆட்சியரகத்தில் வழங்கினார்கள்.
முன்னதாக தருமபுரி மாவட்டத்தில் காமராஜர் பிறந்த தினமான கல்வி வளர்ச்சி தினத்தில் நடத்தப்பட்ட பேச்சு போட்டி, கட்டுரை போட்டி. ஓவிய போட்டி, பட்டி மன்றம் மற்றும் கவிதை போட்டி ஆகிய போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 39 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.
இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் விபத்தில் வருவாய் ஈட்டும் தாய் தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ரூ.75000/- நிதி நல்லம்பள்ளி ஒன்றியத்தை சேர்ந்த 21 குழந்தைகளுக்கும், ஏரியூர் ஒன்றியத்தை சேர்ந்த 1 குழந்தைக்கும் ஆக மொத்தம் 22 குழந்தைகளுக்கும் தலா ரூ.75,000/- க்கான இட்டு வைப்பு நிதிப் பத்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு. குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) திருமதி. இ. மான்விழி, பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் திரு.மணிகிருஷஸ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.