தருமபுரி மாவட்டம் பெரும்பாலை அருகேவுள்ள சாமத்தாள் கிராமத்தை சேர்ந்த தாண்டவன் என்ற விவசாயி தருமபுரி மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார், அந்த மனுவில் தன்னுடய வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டி கடந்த 14.8.23 விண்ணப்பித்ததாகவும், 16.8.23 ம்தேதி தனது செல்போனுக்கு மின் இணைப்பு எண் : 014 - 007 - 559 என குறிப்பிட்டு குறுந்தகவல் வந்ததாகவும், இந்த நிலையில் தனக்கு மின் மீட்டர் வழங்குமாறு பெரும்பாலை மின் வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் போர்மேன் மதியழகனிடம் கேட்டபோது இரண்டாயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் உடனடியாக மின் இணைப்பு கொடுக்க முடியும் என தெரிவித்தால் இரண்டாயிரம் பணம் கொடுத்ததாகவும், ஆனால் இன்று வரை மின் இணைப்பு வழங்கவில்லை என்றும், சம்மந்தபட்ட போர்மேன் மதியழகன் பல ஆண்டுகளாக இதே அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டும் மி்ன்சாரம் தொடர்பாக அலுவலகத்தை நாடி வரும் பொதுமக்கள், விவசாயிகளுக்கு பணத்திறாகாக பல வகையில் நெருக்கடி கொடுப்பதும், மின்வாரியத்திற்கே அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலான பல்வேறு செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், இவர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடு்க்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.