Type Here to Get Search Results !

சீரியம்பட்டி கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 7 பேர் மீது வழக்குப் பதிவு.


தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சீரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேசன் (வயது .58) இவருக்கும் இவரது மாமியார் குப்பம்மாளின் தங்கை வாரிசுகளான குப்பன். மாதம்மாள் மற்றும் ஜெயராணி ஆகியோருக்கும் நிலம் சம்மந்தமாக தகராறு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.


இந்நிலையில் வெங்கடேசனுக்கு தெரியாமல் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு நிலத்தை விற்க விலை பேசி  ஒப்பந்தம் செய்து, நிலத்தை சுவாதீனம் கொடுப்பதற்காக நேற்று செல்வம் (வயது.42), குப்பம்மாள் (வயது. 55), மாதம்மாள்(வயது. 52), ஜெயராணி (வயது. 50), மாதேஷ் (வயது.40), ரவி (வயது. 60), மாதேஷ் (வயது. 31), ஆகியோர் நிலத்திற்க்கு சென்று டிராக்டர் மூலம் நிலத்தை உழுதுள்ளனர்.


இதனை வெங்கடேசன் தட்டி கேட்டார், இதனால் ஆத்திரமடைந்த 7 பேரும் கத்தி, கட்டையால் தாக்கியதில் இரத்த காயமடைந்தார், உடனடியாக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார். 


இதுகுறித்து வெங்கடேசன் மாரண்டஅள்ளி  போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies