தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மணியகாரன் கொட்டாய் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மணியகாரன் கொட்டாய் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றினைந்து மாவிளக்கு தட்டுவரிசையுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர்.
அம்மனுக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது, அதனை தொடர்ந்து பக்தர்கள் கோழி, கிடா பலியிட்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்தி ஸ்ரீ முத்துமாரியம்மனை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.