புத்தகத் திருவிழா செய்திகளை பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் விரிவாகக் கொண்டு செல்வது. தகடூர் புத்தகப் பேரவை நண்பர்கள் துண்டு பிரசுரங்கள், வாட்ஸ் ஆப் போன்றவை மூலம் இதற்கான முன்னெடுப்புகளில் ஈடுபட கேட்டுக்கொள்கிறோம். செப்டம்பர் 5 ஆம் தேதி 'தருமபுரி வாசிக்கிறது' நிகழ்வு நடைபெறும். மாவட்ட ஆட்சியர் அவர்கள் பங்கேற்க உள்ளார்.
தனியார் பள்ளி நிர்வாகங்கள் மற்றும் நிதி உதவி செய்ய வாய்ப்புள்ள புரவலர்களிடம் அருகில் உள்ள பள்ளி மாணவர்களுக்கும், நூலகங்களுக்கும் புத்தகங்கள் அன்பளிப்பு தர உதவி கேட்பது என முடிவு செய்யப்பட்டது, பகலில் இலக்கிய நிகழ்வுகள், மாலை நேரத்தில் மாணவர் கலை நிகழ்ச்சிகள் வழக்கம் போல நடைபெறும். தகடூர் புத்தகப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் இ.தங்கமணி இவற்றை ஒருங்கிணைப்பார்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறும். தமிழ்நாடு அறிவியல் இயக்கச் செயல்பாட்டாளர்களுடன் இணைந்து நூலகர் சரவணன் இதனை ஒருங்கிணைப்பார். அரங்குகள் அமைப்பு, மாலை நேர சொற்பொழிவாளர்கள் ஏற்பாடு போன்ற பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன, புத்தகத் திருவிழாவை வெற்றிகரமாக்கிட அனைவரும் ஒத்துழைக்க அன்புடன் வேண்டுகிறோம் என தெரிவித்தார்.