தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கில துறையின் சார்பாக ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது.
இதில் ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர். மோகனசுந்தரம் அவர்கள் தலைமை வகிக்க, துறை தலைவர் பேராசிரியர். முனைவர். கோவிந்தராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார். தொடர்ந்து ஆங்கிலத்துறை மாணவிகளுடைய கேரள இசை கேட்ப நடன நிகழ்ச்சியும், அத்தப் கோலமிட்ட கொண்டாட்ட நிகழ்வும் நடைபெற்றது. இதில் ஆங்கில துறை உதவி பேராசிரியை. முனைவர் கிருத்திகா, கௌரவ விரிவுரையாளர்கள் முனைவர் சரண்யா மற்றும் மீனா, மாணவ மாணவியர்கள், முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதலாம் ஆண்டு மாணவி நேகா, கயல்விழி மற்றும் சைனி ஆகியோர் செய்திருந்தனர்.