குப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு கோவிந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களை வாழ்த்தி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். தவிர குப்பூர் கிராமத்தில் 75 மரக்கன்றுகள் நட்டு நிகழ்வினை சிறப்பித்தார். கிராமப்புற விளையாட்டினை ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டு பொருட்களை தருமபுரி ஊராட்சி ஒன்றியம் பெரிய குப்பூர், ஆட்டுகாரம் பட்டி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் இ கே புதூர் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் வழங்கி சிறப்பித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் ஆரோக்கியமான மனம் குறித்த உறுதிமொழி யினை அனைவரும் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் குப்பூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சார்பில் செல்வராஜ், ஊராட்சி செயலாளர் இராமச்சந்திரன், 6வது வார்டு கவுன்சிலர் சாமு, கிராம நிர்வாக அலுவலர் சங்கர், நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெரிய குப்பூர் கிராம டாக்டர் பி ஆர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் செய்திருந்தது குறிப்பிடதக்கது. நிறைவாக பெரிய குப்பூர் டாக்டர் பிஆர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் மணிவண்ணன், செயலாளர் செல்வகுமார் இணைந்து நன்றி கூறினர். 200க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள், மகளிர் மற்றும் ஊர்பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.