தருமபுரி அடுத்த செம்மணஹள்ளி ஒட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த முதியவர் மாதப்பன் மூக்கப்ப கவுண்டர் இரண்டு வருடங்களாக ஆதரவின்றி சத்தியமங்கலம் பகுதியில் இருப்பதை மை தருமபுரி அமைப்பினர் சமூக வலைதளங்கள் மூலம் பதிவு செய்தனர். இந்த பதிவை கண்டவுடன் முதியவரின் உறவினர்கள் மை தருமபுரி அமைப்பினரை தொடர்பு கொண்டு முதியவரை தங்களிடம் ஒப்படைக்க கேட்டுக் கொண்டனர்.
இந்த தகவலை சத்தியமங்கலத்தை சேர்ந்த சமூக சேவகர் ஜார்ஜ் என்பவருக்கு தெரிவிக்கப்பட்டது, பின்னர் அவரின் உதவியுடன் முதியவரை சத்தியமங்கலம் பகுதியிலிருந்து மீட்டு, தருமபுரி நகர காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் இளமதி அவர்கள் தலைமையில் முதியவரை அவரது உறவினர் எர்ரப்பட்டி மாணிக்கம் என்பவரிடம் ஒப்படைத்தனர்.
இதற்கு உறுதுணையாக இருந்த மை தருமபுரி அமைப்பின் பாலச்சந்தர், சதீஸ் குமார் ராஜா, அருணாசலம் ஆகியோருக்கு முதியவரின் உறவினர்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.