தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று (18.08.2023) நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது ஆண்டுதோறும் ஆகஸ்ட் திங்கள் 20-ஆம் நாள் நல்லிணக்க தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 20-ஆம் நாள் சனிக்கிழமை அரசு விடுமுறை என்பதால், இன்றைய தினம் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையேற்று, நல்லிணக்க நாள் உறுதிமொழியான "நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக்கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன் என்ற உறுதிமொழியினை வாசிக்க அரசுத்துறை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் திருமதி.நஷீர் இக்பால் (நிலம்), செல்வி. மரியம் ரெஜினா (வளர்ச்சி), திருமதி.மணிமேகலை (சத்துணவு), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.லோகநாதன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (பொது) திரு.ராஜசேகர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
.gif)

