தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அண்ணா ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் அரிமா சங்க தலைவர் வக்கில் ராஜாமணி தலைமையில் நடைப்பெற்றது.
இம்முகாமை அரிமா சங்க நிர்வாகிகள் முத்து, கோவிந்தசாமி, பச்சியப்பன், சீனிவாசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு மூகாம்பிகை கோவிந்தராஜி, மருத்துவர்கள் பாலகிருஷ்ணன், மோகன பிரியா ஆகிேயார் முன்னிலை வகித்தனர்.
முகாமில் கண்புரை, கண் நீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய், பிறவி கண்புரை, மாறுகண் , மற்றும் மாலைக்கண் ஆகிய நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கண் அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்களை இலவசமாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இம்முகாமில் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கண்குறைபாடுடைய நோயாளிகள் கலந்து கொண்டு சிசிச்சை பெற்றனர்.