Type Here to Get Search Results !

பாலக்கோடு பூகானஅள்ளி தொடக்கப்பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பூகானஅள்ளி தொடக்கப்பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்று கொண்டனர். அன்பின் மேல் போதை கொண்டால் ஆயுள் கூடும் போதை மேல் போதை கொண்டால் அழிவே கூடும் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு. நமது  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களால் 11 .8.2023 அன்று காலை 10:30 மணி அளவில் துவக்கி வைக்கப்பட்டது. 


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் பூகானஅள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் முதல்வர் அவர்களின் சிறப்புரையை காண வழிவகை செய்யப்பட்டது. இந்த உறுதிமொழி விழிப்புணர்வு நிகழ்வில் பள்ளியின் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வில்  பள்ளி தலைமை ஆசிரியர் திரு .மா.அசோக்குமார் அவர்கள் தலைமையில் உதவி ஆசிரியர்கள்  சு .பிரேமா,  வ.பிரியதாருணி, மற்றும் மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை மேற்கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies