கைத்தறி இரகங்களின் விற்பனையை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் அன்று தேசிய கைத்தறி தினம் ஆகஸ்டு 7-ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு, இன்றைய தினம் (07.08.2023) தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 9-வது தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பார்வையிட்டார்கள்.
கோ-ஆப்டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம். 1935-ஆம் ஆண்டு துவக்கப்பட்டு தொடர்ந்து 88 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது. இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ- ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும்.
வாடிக்கையாளர்களின் பேராதரவும் தான் முக்கிய காரணம் ஆகும். கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் காஞ்சிபுரம் பட்டு சேலைகள், சேலம் பட்டு சேலைகள், திருபுவனம் பட்டு புடவைகள் மற்றும் கோயம்புத்தூர் மென் பட்டு சேலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளது. மேலும், பாரம்பரிய இரகங்களை புதுப்பிக்கும் விதமாக கண்டாங்கி சேலைகள், கைத்தறி சங்கிடி சேலைகள், காஞ்சி காட்டன் சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், சேலம் காட்டன் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள். திண்டுக்கல் காட்டன் சேலைகள் மற்றும் அருப்புக்கோட்டை காட்டன் சேலைகள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.
மேலும், பலவித வடிவமைப்பு மற்றும் கண்கவர் வண்ணங்களில் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், ஜமக்காளங்கள், துண்டுகள், லுங்கிகள் மற்றும் குல்ட் இரகங்கள் வாடிக்கையாளர்களுக்காக தருவிக்கப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி இரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.gov.in என்ற இணையதளத்தின் மூலமும் பெற்றுக்கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மேலாளர்கள் திருமதி.ரெஜினா, திரு.சுதாகர், திருமதி.பார்வதி, கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக