பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பாக 15 வயதிற்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதவர்களுக்கு எழுத்தறிவு கற்றுக் கொடுக்க புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மூலமாக கற்போர் மையம் எற்படுத்தப்பட்டு எழுத்தறிவும் எண்ணறிவும், வாழ்வியல் திறன்களையும் தன்னார்வலர்கள் மூலம் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய கற்போர் மையங்களுக்கு மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்டங்களுக்கு மூன்று மையங்கள் என்ற அளவில் மாநில எழுத்தறிவு விருது வழங்கப்பட்டது.
இதில் பென்னாகரத்தை அடுத்துள்ள சின்ன பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கற்போர் மையத்திற்கு விருது வழங்கப்பட்டது, இதைப்போன்று தர்மபுரி ஒன்றியம் முக்கல்நாயக்கம்பட்டி கற்போர் மையத்திற்கும், நல்லம்பள்ளி ஒன்றியம் எர்றனள்ளி கற்போர் மையத்திற்கும் என மாவட்டத்தில் மூன்று மையங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
இவ்விருதினை சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மா. பழனி அவர்கள் பெற்றுக்கொண்டார். விழாவில் தன்னார்வலர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் தலைமை ஆசிரியர்கள் சிறப்பிக்கப்பட்டார்கள். இந்நிகழ்வில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள், கல்வித்துறையை சார்ந்த இயக்குனர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.