தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், கோணங்கிஅள்ளி ஊராட்சி, பி.அக்ரகாரம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்ட நிதியில் ரூபாய் 6.00 இலட்சம் மதிப்பீட்டில் டெஸ்க்,பென்ச் வழங்க நிதி ஒதுக்கீடு செய்தார். பள்ளிக்கு டெஸ்க்,பென்ச் வழங்கும் விழா நடைபெற்றது. தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கலந்துக்கொண்டு டெஸ்க்,பென்ச் பள்ளிக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பி.அக்ரகாரம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மான்குட்டி, பி.அக்ரகாரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வையாபுரி, மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி, ஒன்றிய செயலாளர்கள் - சிலம்பரசன், முருகன், ஒன்றிய தலைவர் வீரமணி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மாது, பள்ளி மேலாண்மை குழு மைதிலி, மாதையன், மணிவண்ணன், மாரியப்பன், வினோத், ராஜா, ஒன்றிய குழு உறுப்பினர் தனலட்சுமி முருகன், ஆசிரியர் குழந்தைவேல் உள்ளிட்ட பள்ளியின் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.