Type Here to Get Search Results !

எர்ரபையனஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசு இலவச மிதிவண்டி வழங்கிய MLA.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி  ஒன்றியம், எர்ரபையனஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கலந்துக்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆண்டாள், ஊராட்சி மன்ற தலைவர் சிலம்பரசன், துணை தலைவர் ரஞ்சித்குமார், ஒன்றிய கவுன்சிலர் கணேசன், பாமக மாநில துணைத் தலைவர் பெ.சாந்தமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் பெ.சக்தி, ஒன்றிய தலைவர்கள் விஜி, வீரமணி, பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies