சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலையின் 218-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்கு அரூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கோ.சந்திரமோகன் தலைமையில் மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தினார்கள்.
இதில் தருமபுரி மேற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் சி.தேசிங்குராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் கே.மதி, ரஜினிமாறன் மற்றும் மதிமுக வேலாயுதம் பி.வெங்கடாசலம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.