Type Here to Get Search Results !

பாலக்கோடு பேரூராட்சியில் 1.47 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி.


தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள 8 வார்டுகளுக்கு உட்பட்ட முத்துகவுண்டர் தெரு,  ரேஷன்கடை தெரு, தீர்த்தகிரி நகர், இடுகாட்டுக்கு செல்லும் பாதை எச்.பி.கேஸ் ஏஜென்சி தெரு, கோட்டை தெரு, கோபால்செட்டி தெரு , கணம்பள்ளி தெரு, மணியகாரன் கொட்டாய் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2.5 கிலோ மீட்டர் தூரம் புதிய தார்சாலை அமைக்க 1.47 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் தொடக்க பணிகளை பேருராட்சி தலைவர் பி.கே.முரளி அவர்கள் கடந்த மாதம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.


இப்பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்த நிலையில் கோபால் செட்டி தெருவில் நடைபெற்று வரும் சாலை பணிகளை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்,


அப்போது சாலை தரமானதாகவும், விரைந்தும் முடிக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது உதவி பொறியாளர் பழனி உடன் இருந்தார்ர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies