Type Here to Get Search Results !

பெரியனூர்‌ கிராமத்தில்‌ மக்கள்‌ தொடர்புத்திட்ட முகாம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தலைமையில்‌ நடைபெற்றது.


பாலக்கோடு வட்டம்‌, பெரியனூர்‌ கிராமத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ 'தொடர்புத்திட்ட முகாமில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி ஒஆப., அவர்கள்‌. 119 பயனாளிகளுக்கு ரூ.87.20 இலட்சம்‌ மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார்கள்‌.


தருமபுரி மாவட்டம்‌, பாலக்கோடு வட்டம்‌. பெரியனூர்‌ கிராமத்தில்‌ மக்கள்‌ தொடர்புத்திட்ட முகாம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதிகிசாந்தி ஒஆப., அவர்கள்‌ தலைமையில்‌ இன்று (19.07.2023) நடைபெற்றது. இன்றைய தினம்‌ நடைபெற்ற மக்கள்‌ தொடர்பு திட்ட முகாமில்‌ வருவாய்‌ நிர்வாகம்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்துறையின்‌ சார்பில்‌ 32 பயனாளிகளுக்கு ரூ.15.68 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ இலவச வீட்டுமனைப்‌ பட்டாக்களையும்‌, 1 பயனாளிக்கு பட்டா மாறுதலையும்‌, சமூக பாதுகாப்புத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 50 பயனாளிகளுக்கு ரூ.52.35 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ முதியோர்கள்‌, விதவைகள்‌, மாற்றுத்திறனாளிகள்‌ மற்றும்‌ இயற்கை மரண உதவித்தொகைகளையும்‌, வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்துறையின்‌ சார்பில்‌ 12 பயனாளிகளுக்கு ரூ.1.04 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ விசை தெளிப்பான்‌, தேங்காய்‌ நாற்றுகள்‌, துவரை மற்றும்‌ 1,400 ராசா உள்ளிட்ட வேளாண்‌ உதவிகளையும்‌, தோட்டக்கலைத்துறையின்‌ சார்பில்‌ 3 பயனாளிகளுக்கு ரூ.1.12 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ மா அடர்‌ நடவு, நுண்ணீர்‌ பாசன திட்ட கருவிகளையும்‌, தக்காளி நாற்றுகளையும்‌, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடண்‌ சங்கங்களின்‌ சார்பில்‌ 20 விவசாயிகளுக்கு ரூ.17.01 இலட்சம்‌ கடன்‌ உதவிகள்‌, கால்நடை பராமரிப்பு உதவி தொகைகளையும்‌, வேளாண்மை பொறியியல்‌ துறையின்‌ சார்பில்‌ 1 பயனாளிக்கு ரூ.2.22 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ பவர்‌ டிரில்லர்‌ கருவி என மொத்தம்‌ 119 பயனாளிகளுக்கு ரூ.87,19,749/- (ரூ.87.20 இலட்சம்‌) மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி ஒஆப., அவர்கள்‌ வழங்கினார்கள்‌.


முன்னதாக, இம்மக்கள்‌ தொடர்புத்திட்ட முகாமில்‌ பல்வேறு துறைகளின்‌ சார்பில்‌ அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ பார்வையிட்டார்கள்‌. இம்மக்கள்‌ தொடர்பு திட்ட முகாமில்‌ பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதிகிசாந்தி ஒஆப. அவர்கள்‌ தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ மக்கள்‌ தொடர்பு திட்ட முகாமானது மிகவும்‌ பின்தங்கிய மற்றும்‌ மலைவாழ்‌ மக்கள்‌ அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகளை தேர்வு செய்து அத்தகைய பகுதிகளில்‌ அரசின்‌ அனைத்து துறையினுடைய அலுவலர்களையும்‌ அழைத்துச்‌ சென்று, அரசு திட்டங்களை எடுத்துரைத்து, அங்குள்ள பொதுமக்களிடம்‌ கோரிக்கை மனுக்களை பெறக்கூடிய ஒரு நிகழ்வாக அமைய வேண்டுமென்றும்‌. பெரியவர்களுக்கும்‌, பெண்களுக்கும்‌, தாய்மார்களுக்கும்‌, பொது மக்களுக்கும்‌, நம்முடைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும்‌ திட்டங்களை எடுத்துக்கூறும்‌ விதமாகவும்‌ ஒந்த முகாம்கள்‌ அமைக்கப்பட வேண்டும்‌ என்று உத்தரவிட்டுள்ளார்கள்‌.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ உத்தரவின்படி, இண்றைய தினம்‌ தருமபுரி மாவட்டம்‌, பாலக்கோடு வட்டம்‌, மாரண்டஅள்ளி உள்வட்டம்‌, பெரியனூர்‌ கிராமத்தில்‌ மக்கள்‌ தொடர்பு திட்ட முகாம்‌ சிறப்பாக நடைபெற்றுக்‌ கொண்டிருக்கின்றது. மாரண்டஅள்ளி உள்வட்டத்தில்‌ பெரியானூர்‌, பெரியாணூர்‌ காலணி, புளியந்தோப்பு, செட்டிப்பட்டி, புதுப்பேட்டை, ஏழு குண்டூர்‌. கொக்கிக்கல்‌, பட்டாபி நகர்‌ உள்ளிட்ட 8 குக்கிராமங்களை உள்ளடக்கியது. இப்பகுதி மக்கள்‌ பயன்பெறும்‌ வேண்டும்‌ என்ற நோக்கிலும்‌, மக்களின்‌ சிரமங்களை போக்கும்‌ வகையிலும்‌ மக்கள்‌ தொடர்பு திட்ட முகாம்‌ இப்பகுதியில்‌ நடைபெறுகின்றது.


பஞ்சப்பள்ளி விவசாயம்‌ சார்ந்த பகுதியாக உள்ளது. விவசாயம்‌ மற்றும்‌ புதிய வேளாண்‌ கருவிகள்‌ தொடர்பான அரசின்‌ திட்டங்களை செய்தித்தாள்கள்‌ மற்றும்‌ வட்டார வேளாண்‌ விரிவாக்க மையங்கள்‌ மூலமாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு அரசால்‌ வேளாண்மை துறைக்கென செயல்படுத்தப்படும்‌ திட்டங்களை விரைவாக தெரிந்துகொள்ளும்‌ வகையில்‌ அரசால்‌ உழவன்‌ செயலி அறிமுகம்‌ செய்யப்பட்டு, மக்கள்‌ பயன்பாட்டில்‌ உள்ளது. 


இச்செயலி மூலம்‌ வேளாண்‌ பொருட்களின்‌ விலை நிலவரங்கள்‌, வேளாண்‌ துறை சார்ந்த அலுவலர்களின்‌ தொடர்பு எண்கள்‌, வானிலை நிலவரங்கள்‌, தமிழ்நாடு அரசின்‌ வேளாண்‌ துறை சார்ந்த திட்டங்கள்‌, அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள்‌ ஆகியவற்றை விவசாயிகள்‌ தெரிந்துகொள்ளலாம்‌ மேலும்‌ கால்நடை பராமரிப்புத்துறை, மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறை, சமூக நலத்துறை, பழங்குடியினர்‌ நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்‌ நலத்துறை, மாவட்ட தொழில்மையம்‌ உள்ளிட்ட துறைகளின்‌ சார்பில்‌ துறை அலுவலர்கள்‌ தங்களின்‌ துறைகளின்‌ மூலம்‌ செயஸ்படுத்தப்படும்‌ திட்டங்கள்‌ அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள்‌ குறித்து எடுத்துரைத்துள்ளனர்‌. எனவே பொதுமக்களாகிய நீங்கள்‌ அரசால்‌ செயல்படுத்தப்படக்கூடிய அணைத்து திட்டங்களையும்‌ முழுமையாக தெரிந்துகொண்டு, விண்ணப்பித்து பயனடைய வேண்டும்‌ இன்றைய தினம்‌ நடைபெறும்‌ மக்கள்‌ தொடர்பு திட்ட முகாமிற்கு முன்கூட்டியே மனுக்கள்‌ பெறுவது தொடர்பாக இப்பகுதி சுற்றுவட்டார கிராமங்களில்‌ விழிப்புணர்வு செய்யப்பட்டு, வருவாய்துறை மற்றும்‌ பிறத்துறை சார்ந்த அலுவலர்கள்‌ முன்பாகவே இங்கு வருகைதந்து பொதுமக்களிடம்‌ கோரிக்கை மணுக்களை பெற்று, தகுதி வாய்ந்த, உரிய கோரிக்கைள்‌ ஏற்கப்பட்டு இன்றைய தினம்‌ சுமார்‌ ரூபாய்‌ 87.20 கலட்சம்‌ மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்‌ வழங்கப்படுகின்றன.


மேலும்‌ இந்த மக்கள்‌ தொடர்புத்‌ திட்ட முகாமில்‌ இன்றைய தினம்‌ வழங்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கை மணுக்களும்‌ மற்றும்‌ ஏற்கெனவே பரிசீலனையில்‌ உள்ள மனுக்களும்‌ உரிய முறையில்‌ கள ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகள்‌ அனைவருக்கும்‌ அரசின்‌ நலத்திட்டங்கள்‌ வழங்கப்படும்‌. அரசு மக்களின்‌ உயர்வுக்காக திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை பொதுமக்களும்‌ முழுமையாக அறிந்து பயன்பெற வேண்டும்‌ என கேட்டுக்கொள்கிறேன்‌. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதிகி.சாந்தி இஆப., அவர்கள்‌ தெரிவித்தார்கள்‌.


இம்மக்கள்‌ தொடர்புத்திட்ட முகாமில்‌ தருமபுரி வருவாய்‌ கோட்ட அலுவலர்‌ திருமதிடிகே.கீதாராணி. மாவட்ட ஐராட்சிக்குழு உறுப்பினர்‌ திரு. சரவணண்‌, பாலக்கோடு ஊராட்சி ஒன்றியக்‌ குழுத்‌ தலைவர்‌ திருமதிபாஞ்சோலை கோபால்‌, தனித்துணை ஆட்சியர்‌ (சமூக பாதுகாப்புத்‌ திட்டம்‌) திருமதிவி.கே.சாந்தி, வேளாண்மை இணை இயக்குநர்‌ திருமதிக. விஜயா, பஞ்சப்பள்ளி ஊராட்சி மன்றத்‌ தலைவர்‌ திருநாராயணசாமி, வட்டாட்சியர்‌, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்‌ உட்பட அனைத்து, துறை மாவட்ட அளவிலான முதல்‌ நிலை அலுவலர்கள்‌ மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌ கலந்துகொண்டனர்‌.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies