Type Here to Get Search Results !

தருமபுரி மேற்கு மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் மாவட்டச் செயலாளரிடம் வாழ்த்து பெற்றனர்.


தருமபுரி மேற்கு மாவட்டத்தில்  மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் சந்தர் அவர்கள்  நியமிக்கப்பட்டுள்ளார். மாணவரணி  துணை அமைப்பாளர்களாக பிரபு, முனுசாமி, அரவிந்த், சுர்ஜித், வழக்கறிஞர் புனிதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாணவரணி அமைப்பாளர் சந்தர் மற்றும் துணை அமைப்பாளர்கள் முன்னாள் அமைச்சரும் தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான முனைவர் பழனியப்பன் அவர்களிடமும், கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி அவர்களிடமும் நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து பெற்றனர். மேலும் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளுடன் வாழ்த்துக்கள் பெற்றனர். 


மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் ,ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல்,சரவணன், கிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவகுரு, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ஆதம்,ஓட்டுனர் அணி சக்தி, உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies