தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே உள்ள வட்டகாணம்பட்டி இருளர் சமுதாயத்தினை சார்ந்த பள்ளி மாணவர்களுக்கு மேலங்கி மற்றும் கல்வி உபகரணங்கள் மை தருமபுரி சமூக அமைப்பின் சார்பாக வழங்கப்பட்டது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் 30 மாணவர்கள் உள்ளனர்.
இவர்களது கல்வி மேலும் சிறந்து விளங்கி பாராட்டும் விதமாக மேலங்கியும், படிப்பு புத்தகங்கள், கல்வி உபகரணங்களை, வழங்கினர். இந்நிகழ்வில் மாரண்டஅள்ளியை சார்ந்த சமூக சேவகர் வைத்தியலிங்கம் தலைமையில் மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஷ்குமார் ராஜா, தமிழ்செல்வன், அருணாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்
.gif)

