Type Here to Get Search Results !

திமுகவின் சட்டத்துறை மிகவும் வலிமையானது தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டிஎன்வி. எஸ்.செந்தில்குமார்.


தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எம்பியின்  முயற்சியால் பள்ளி மாணவர்கள் பயன் பெரும் வகையில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்காக ஸ்மார்ட் வகுப்பறையை அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை  திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில்  கடந்த சில நாட்களாக ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு எதிர்கட்சிகளை அமலாக்கத்துறையை பயன்படுத்தி  பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது இதன் மூலம் எதிர்கட்சிகளை ஒன்றினைய விடாமல் நீர்த்துபோக செய்யலாம் என கனவு காண்கிறது இதுவரை அமலாக்கத்துறை ஐநூறுக்கும் மேற்பட்ட வழக்குளை பதிவு செய்துள்ளது ஆனால் வெறும் 120 வழக்குகளை மட்டுமே தண்டனைக்கு கொண்டு வந்துள்ளனர், ஆனால் திமுகவை பொறுத்தவரை சட்டத்துறை மிகவும் வலிமையாக உள்ளது இதனை சட்டப்படி எதிர்கொள்வோம் என தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் பேரூராட்சிதுணை தலைவர் சூர்யாதனபால்  ஒன்றிய செயலாளர்கள் ஆர்.வேடம்மாள் வே.சௌந்தரராசு  பேரூர் கழக செயலாளர் முல்லைரவி  துணை செயலாளர் செல்வதயாளன் தலைமை கழக பேச்சாளர் செந்தாமரைகண்ணன்  மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் முஜீப் சூர்யாவெங்கடேசன்  தலைமை ஆசிரியர் ஆறுமுகம் உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிதுரை சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies