Type Here to Get Search Results !

புது பட்டாணியர் தெருவில் மீன் வியபாரி மாயம் மனைவி போலீசில் புகார்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புது பட்டாணியர்தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது.48) மீன் வியபாரி, இவரது மனைவி சிவகாமி,இவர்களுக்கு 14 வயதில் விஷ்னு என்ற மகன் உள்ளார்.


சிவக்குமார் கடந்த 12ம் தேதி மீன் வியாபாரம் சம்மந்தமாக வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது செல்போன் ஸ்விட்ச்ஆப் செய்யப்பட்டதால் தொடர்பு கொள்ள முடியவில்லை.


பல்வேறு இடங்களில் தேடியும், கனவன் கிடைக்காததால் கனவனை கண்டுபிடித்து தரக் கோரி அவரது மனைவி சிவகாமி பாலக்கோடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிவக்குமாரை தேடி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies