Type Here to Get Search Results !

திருமல்வாடி அரசுமேல்நிலை பள்ளிக்கு 7 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 50 இருக்கைகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல். ஏ.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே திருமல்வாடியில்  உள்ள  அரசுமேல்நிலை பள்ளிக்கு  7 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 50 இருக்கைகளை வழங்கும் நிகழ்ச்சி இன்று  நடைப்பெற்றது.


திருமல்வாடியில் உள்ள   அரசு மேல்நிலைப் பள்ளியில்  மாணவர்களின்  எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய இருக்கைகள்  இல்லாமல் மாணவர்கள் நெருக்கமாகவும், தரையில் அமர்ந்தும் படித்து வந்தனர்.


இதனை அறிந்த பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்கள்  சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து 7 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50  இருக்கைகளை இன்று பள்ளிக்கு   வழங்கி சிறப்புரையாற்றினார்.


இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கில்செந்தில், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராசன், கூட்டுறவு சங்க தலைவர்கள் புதுர் சுப்ரமணி, விமலன், கூட்டுறவுசர்க்கரை ஆலை இயக்குநர் மாது, தலைமைஆசிரியர் பாபுசுந்தரம் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies