தமிழ்நாட்டில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான இள நிலை மருத்துவம், பல் மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்ற மாணவ, மாண விகளின் தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இதில், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சத வீத இடஒதுக்கீட்டில், தர்மபுரி மாவட்டம் படித்த மாணவர் பச்சியப்பன் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் நீட் தேர்வில் 565 மதிப்பெண் பெற்று இந்த தரவரிசையில் இடம்பிடித் துள்ளார்.
இது குறித்து மாணவர் கூறியதாவது, எனது தந்தை சுந்தரமூர்த்தி 'பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகிறார். தாயார் இந்திராணி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். எனது தாத்தா பாட்டி அரவணைப் பில் தான் நான் பள்ளி படிப்பினை முடித்தேன்.மனநலம் பாதிப்பு பட்டிருக்கும் எனது தாயாருக்காக மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், இதன் காரணமாக கடுமை யாக படித்து தற்போது 565 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 2-ம் இடம் பெற்றுள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மருத்துவம் படித்து என் தாயாருக்கும், அவரை போல் உள்ளவர்களுக்கும் இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும்.
ஏழைகளுக்கு தரமான மருத்துவ வசதி கிடைக்க உழைப்பேன். இவ்வாறு மாணவர் கூறினார். மாநில அளவில் சாதனை படைத்த மாணவரை ஆசிரியர்கள் மற்றும் அந்த பகுதியினை சார்ந்த ஊர் பொதுமக்கள் பாராட்டினர்கள்.


.gif)

