தர்மபுரி ஒன்றியத்துக்குட்பட்ட அவ்வையார் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி ஆகிய மையங்களில் நடைபெற்ற இப்பயிற்சியில் தர்மபுரி ஒன்றியத்தில் உள்ள 13 மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த 148 முதுகலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் மாணவர்களின் உடல்நலம், நலவாழ்வு மனநலம் மற்றும் வாழ்வியல் திறன்கள் ஆகிய தலைப்புகளில் பயிற்சி நடைபெற்றது.

அவ்வையார் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சியை பள்ளியின் தலைமை ஆசிரியை கலைச்செல்வி தொடங்கி வைத்தார். இப்பயிற்சியை மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) ரவிச்சந்திரன் பார்வையிட்டு இப்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். அவ்வையார் பள்ளியில் நடைபெற்ற பயிற்சியில் முதுகலை ஆசிரியர்கள் ஜோதிலதா, ராஜேஸ்வரி, தாமரைச்செல்வி மற்றும் ஞானமூர்த்தி ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.
.gif)

.jpg)