Type Here to Get Search Results !

பாலக்கோடு கடைத்தெருவில் நடந்து சென்ற முதியவர் மீது பைக் மோதியதில் முதியவருக்கு பலத்த காயம் .


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வடையன்கிணறு கிராமத்தை சேர்ந்த விவசாயி முனுசாமி (வயது.64), இவர் இன்று காலை பாலக்கோடு பஸ் நிலையம் அருகே உள்ள உரக்கடையில் 5 கிலோ உரம் வாங்கி கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார்,


பி.டி.ஓ.அலுவலகம் எதிரே சென்று கொண்டிருந்த போது பின்னால் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் முதியவர் மீது மோதியது, இதில் முதியவர்  தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கமடைந்தார், உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


தகவலறிந் பாலக்கோடு போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies