Type Here to Get Search Results !

கடமடை அருகே பைக் மோதியதில் கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கிருஷ்ணன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பெரியசாமி  (வயது.55) இவர் இன்று மாலை தனது மோட்டார் சைக்கிளில்  பாலக்கோட்டிலிருந்து கிருஷ்ணன் கொட்டாய் நோக்கி தர்மபுரி சாலையில் சென்று கொண்டிருந்தார்,


கடமடை அருகே சென்றவர் திடிரென மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார், அப்போது பின்னால் வேகமாக  வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது, இதில் பெரியசாமிக்கு தலையில்  பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


தகவலறிந்த பாலக்கோடு போலீசார் உடலை கைப்பற்றி பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies