Type Here to Get Search Results !

சவுளுர் கிராமத்தில் ஸ்ரீமாரியம்மன், விநாயகர் மற்றும் ஓம்சக்தி கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு   அருகே உள்ள சவுளுர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமாரியம்மன், விநாயகர் மற்றும் ஓம்சக்தி கோவில் கும்பாபிஷேக  திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைப்பெற்றது.

இந்த விழா கடந்த 5ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.  முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹதி நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து, யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்த குடத்தை முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று  கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹாகும்பாபிஷேகம் செய்து  திருக்குட நன்னீராட்டு  தீபாரதனை காட்டினார். 


பின்னர்  கலசத்திற்கு ஊற்றிய புனித நீர்  பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது, இதையடுத்து மாரியம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது, சிறப்பு அலங்காரத்தில் அம்மன்  பக்தர்களுக்கு  அருள் பாலித்தார். 


இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி  பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர் சகாதேவன், மந்திரி கவுண்டர் கோபால், பூசாரி பழனிவேல். கவுன்சிலர்கள் வேடியப்பன், கணேசன், மாதேஷ், ஆனந்தன், ஊர் பொதுமக்கள் மற்றும்  விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies