Type Here to Get Search Results !

பென்னாகரம் அருகே உள்ள பிக்கப்பட்டி அரசுப் நடுநிலைப் பள்ளி ஆசிரியருக்கு பசுமை முதன்மையாளர் விருதை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.


தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் கிராமப் புறங்களில் உள்ள ஏரிகள் ஆகியவற்றில் மரக்கன்றுகளை நடவு செய்தும், மரக்கன்றுகளை வழங்கி, பராமரித்து வந்த பென்னா கரம் அருகே பிக்கம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கோ.தாமோதரன் 2022 ஆம் ஆண்டிற்கான பசுமை முதன்மை யாளர் விருதுக்குத் தேர்வு பெற்றார்.


இந்த நிலையில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர்  அலு வலகத்தில் ஆசிரியர் தாமோதரனுக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பசுமை முதன்மையாளர் விருதினை வழங்கினார். விருது பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியருக்கு, சக ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies