மை தருமபுரி அமைப்பின் சார்பாக மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 ஜூன், 2023

மை தருமபுரி அமைப்பின் சார்பாக மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.


மை தருமபுரி அமைப்பின் சார்பாக அரசு பள்ளி மாணவர்கள், குழந்தைகள் இல்ல மாணவர்களின் கல்விக்கு உதவி வருகின்றனர், தருமபுரி மாவட்ட மலைவாழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு மேலங்கி வழங்கினர், மை தருமபுரி அமைப்பின் மூலம் 10 மாணவர்களை தத்தெடுத்து கல்வி வழங்கி வருகின்றனர், மேலும் தருமபுரி மாவட்டம் பூகானஅள்ளி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் 70 நபர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அசோக்குமார், ஆசிரியை பிரேமா, பிரியதாருணி ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர். மை தருமபுரி அமைப்பின் சார்பாக நிறுவனத் தலைவர் மதிப்புறு முனைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒருங்கிணைப்பாளர் அருணாசலம் ஆகியோர் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினர். 


கருத்துகள் இல்லை:

Post Top Ad