தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் காரிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜக்கசமுத்திரம் கிராமத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பத்து ரூபாய் இயக்கத்தின் நிர்வாகிகள் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005. 2 ஜெ-ன் கீழ் ஆய்வு செய்தனர்.


இந்த ஆய்வில் மருத்துவர்களின் வருகை பதிவேடு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித்தொகைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்கள், பெண்கள் பணிபுரியும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் மாற்றத்திற்கான திறனாளிகள் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ரா.செல்வம், மாவட்ட இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் பா.கணேஷ், பாலக்கோடு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திரு நாகராஜ், மற்றும் இயக்கத்தின் நிர்வாகி முனிராஜ் போன்றோர் கள ஆய்வில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக