Type Here to Get Search Results !

ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தருமபுரி தெற்கு மனவளக்கலை மன்றம் இணைந்து சர்வதேச யோக தினம் கொண்டாடப்பட்டது.


மொரப்பூர் R. கோபிநாதம்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தருமபுரி தெற்கு மனவளக்கலை மன்றம் இணைந்து சர்வதேச யோக தினம் கொண்டாடப்பட்டது. இக்கல்லூரியின் நிறுவனர் G.S. ராமலிங்கம் மற்றும் தாளாளர் R.கோபி தலைமையேற்று மாணவர்களுக்கு உடலையும் உள்ளத்தையும் ஒருசேர உறுதியாக்க யோகா செய்யுங்கள்.' என்று யோகாவின் சிறப்புகளை பற்றி விவரித்தனர். 


இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் R. கணேஷ் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். சிறப்பு விருந்தினர் தருமபுரி தெற்கு   மனவளக்கலை மன்ற பேராசிரியர் M. கலைச்செல்வி தலைவர், மற்றும் பேராசிரியர்கள் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளிய மனவளக்கலை யோகா பற்றிய விழிப்புணர்வு மற்றும் யோகா பயிற்சி வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியின் இறுதியாக பொறுப்பு ஆசிரியர் K. அரேஷ் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைத்தலைவர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies