தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே கங்கபாளையம் கிராமத்தை சேர்ந்த துணி வியபாரி மாரிசெட்டி (வயது. 56), இவரது மணைவி சத்தியா இவர்களுக்கு 2 மகன்கள் ஒரு மகன் உள்ளனர். மாரிசெட்டி கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகாததால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் நேற்று அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள துரிஞ்சி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த பஞ்சப்பள்ளி போலீசார் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
.gif)

