எங்கள் ஊருக்கு மயான பாதைக்காக ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பட்டா நிலத்தில் நில ஆர்ஜிதம் செய்து அதற்கான தொகையை அவர்களுக்கு வழங்கி, எங்களுக்கு மயான பாதை ஒதுக்கீடு செய்து, அந்நிலத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கான்கிரீட் சாலை போடப்பட்டது. தற்போது தொப்பூர் பஞ்சாயத்து, நல்லம்பள்ளி ஒன்றியத்தின் மூலம் கழிவு நீர் கால்வாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ஒரு சிலர் அரசாங்க பணியை செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர்.


மயானம் மற்றும் மயான பாதை அவர்களது பட்டா நிலத்தில் உள்ளதாகவும், யாரும் இவ்வழியில் செல்லக்கூடாது என்றும் தடுத்து வருகின்றனர். இதை ஊர் பொதுமக்கள் கேட்கும் போது தகாத வார்த்தைகளால் பேசி வருகின்றனர். இதனால் சாதி சண்டை ஏற்படும் சூழல் உள்ளது. மேலும் எங்கள் ஊரில் எவரேனும் இறந்தால் அச்சடலத்தை எடுத்துச் செல்ல வழி, அதனை புதைக்க மயான வசதியும் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே எங்களுக்கு மயான பாதை மற்றும் மயான வசதிக்கு நிரந்தரமான நிலத்தை ஒதுக்கீடு செய்து எங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்வதாக அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.